Main Menu

சீன பாடசாலையில் கொடூரம் – 8 மாணவர்கள் குத்திக் கொலை!

சீனாவில் இனந்தெரியாத நபர் ஒருவர் 8 பாலர் வகுப்பு மாணவர்களை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் என்ஷி கவுண்டி பகுதியில் உள்ள பையாங்பிங் பிரதேசத்தில் சாயோங்பாக் போ பாடசாலையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

தவணை விடுமுறைக்கு பின்னர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், வழக்கம் போன்று மாணவர்கள் தமது வகுப்பறைகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அதன்போது, அங்கு சென்ற இனந்தெரியாத நபர் திடீரென சிறார்களை கூரிய ஆயுதத்தால் தாக்க ஆரம்பித்தார்.

அச்சம் காரணமாக சிறார்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்துள்ளனர். அவர் கத்தியால் குத்தியதில் 8 ஆரம்ப வகுப்பு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

விசாரணையின் ​போது சந்தேகநபர் கடந்த மே மாதமே சிறையில் இருந்து விடுதலை ஆனதும், தனது காதலியின் கண்களை துளையிடம் கருவியால் துளையிட முயன்ற குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது மீண்மும் கொலைகள் மற்றும் வன்முறை செயற்பாடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களாக சீனாவில் இது போன்று பாடசாலை மாணவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாடசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிரவும்...