Main Menu

பொலிவிய நாட்டின் வீதிகளில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்துள்ளார்.

கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 85 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது.

மீதமுள்ளவர்கள் பிற காரணங்களால் இறந்ததாக கூறப்படுகின்றது. அதாவது ஒரு நோய் அல்லது வன்முறை காரணத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொலிவியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 64,135பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,328பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...