Main Menu

கொரோனா தொற்று மீண்டும் திரும்பியுள்ளது – செக் பிரதமர்

செக் குடியரசு மீண்டும் மிகவும் கடினமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என பிரதமர் அண்ட்ரேஜ் பாபிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக செக் குடியரசு தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது என உள்துறை அமைச்சர் ஜோன் ஹமாசெக் கூறினார்.

வசந்த காலத்தில் முக்கய கட்டுப்பாடுகளை விரைவாக அமுல்படுத்தியதன் மூலம் தொற்றுநோயின் மோசமான நிலையை நாடு தவிர்க்க முடிந்தது.

இருப்பினும் கடந்த திங்கட்கிழமை மேலும் 1,476 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன, இது 10 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் மொத்தம் 50,764 பேருக்கு கொரோனா தொற்றினை கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் வரவிருக்கும் கோடையில் கட்டுப்பாடுகளை நீக்குவது தவறு என பிரதமர் அண்ட்ரேஜ் பாபிஸ் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அதே பரந்த அளவிலான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த விரும்பவில்லை என்றும், பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பகிரவும்...