Main Menu

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

அதன்படி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக ஸ்தாபனங்களில் வேலை செய்பவர்கள் முக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில், தமது வீடுகளில் அதிகபட்சம் 15 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் அவற்றில் அடங்குகின்றன.

இதேவேளை பப்கள், மதுபான நிலையங்கள் மற்றும் உணவகங்கள் வியாழக்கிழமை முதல் இரவு 10 மணியுடன் மூடப்பட வேண்டும் என்றும் ? 6 பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் உள்ளக விளையாட்டுக்கள் அனைத்திற்கும் தடை எனவும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறையினை ஸ்கொட்லாந்து அரசாங்கமும் கடைபிடிப்பதாக அறிவித்துள்ளது. அத்தோடு வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் இனி ஸ்கொட்லாந்தில் எங்கும் சந்திக்க முடியாது என்றும் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.

மேலும் பொது இடத்தில் சட்டங்களை மீறுபவர்கள் முக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 200 பவுண்ட்ஸ் முதல் குற்றத்திற்கு ஏற்ப அபராதம் உயரும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...