Main Menu

உயர் கல்வி கற்றோரின் வீதத்தில் தமிழகமே முதலிடம் – முதலமைச்சர்

உயர் கல்வி கற்றோரின் வீதத்தில் தமிழகமே முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடிலுள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் கல்வி கற்கக் கூடாது என அந்த காலத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட அந்த காலத்தில் கமலா சத்தியநாதன் என்ற பெண் இந்த தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து 1901இல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அந்தப் பெண்ணின் வாழ்க்கையை முன்னுதாரமாகக் கொண்டு மாணவிகள் வாழ்வில் முன்னேற வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசு கல்வி வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் சமுதாய பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் உயர் கல்வி படித்தோர், 2011ஆம் ஆண்டில் 32 சதவீதமாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஏராளமான கல்வித் திட்டங்களை வகுத்ததன் மூலம் உயர் கல்வி பெற்றோர் 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அந்தவகையில் உயர் கல்வி கற்றோரின் வீதத்தில் இந்தியாவில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தெரிவித்தார்.

பகிரவும்...