Main Menu

இது கொரோனா வைரஸ் அல்ல ‘சீன வைரஸ்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு!

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸை (கோவிட்-19) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘சீன வைரஸ்’ என விபரத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல்முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் மாறி மாறிக் குற்றம் சாட்டி வரும் நிலையில், ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் விமர்சகர்கள் இது இனவெறித் தாக்குதல் என்றும் ஆசிய- அமெரிக்க சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் வூஹான் நகரத்தில் இருப்பவர்களுக்கு முதன்முதலாகத் தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் எப்போது முடிவுக்குவரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ‘நாம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் முடிவுக்கு வரும்” என கூறினார்.

பகிரவும்...