Main Menu

வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு மற்றும் விமானக் கொள்கைகள் விரைவாக மாறி வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு திரும்புவதற்கு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே இந்த கடினமான காலங்களில் வீட்டிற்குச் செல்ல அல்லது விடுமுறை திட்டங்களைத் தீர்க்க உதவ மத்திய அரசு முன்வந்துள்ளது.

இதில் சிலர், கனடாவுக்கு திரும்பும் நேரத்தில் எல்லை மூடப்படலாம் என்று அஞ்சுகிறார்கள். பெரும்பாலான வெளிநாட்டினருக்கான எல்லையை அரசாங்கம் மூடியுள்ள நிலையில், கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இன்னும் நுழைய முடியும். இருப்பினும், கனடாவுக்குத் திரும்பும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த புதன்கிழமை நிலைவரப்படி, சர்வதேச விமானங்கள் மொன்றியல், ரொறன்ரோ, கல்கரி மற்றும் வன்கூவர் ஆகிய முக்கிய விமான நிலையங்களில் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கிடையில், விமான நிறுவனங்கள் ஏற்கனவே விமான சேவைகளைக் குறைத்து வருகின்றன.

பகிரவும்...