Main Menu

அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா: அந்நாட்டு சுகாதாரத் துறையினர் அச்சம்!

அமெரிக்காவில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 கோடிவரை இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில், பெரும்பான்மையான மக்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கொரோனா பிரசோதனைகளில் இடைவெளி ஏற்படும் போது தொற்றுக்குள்ளானவர்க்ள விடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளில் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 25 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது உலக அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ள ஏறக்குறைய ஒரு கோடி பேரில் கால் பங்கினர் என்பதுடன், உயிரிழப்புக்களிலும் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அத்துடன் அங்கு நாளுக்கு நாள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டில் இதுவரை 3 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 25 இலட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத் துறையினரால் இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...