பேர்னார் தப்பி – மறைவு
பேர்னார் தப்பி (Bernard Tapie) தனது 78வது வயதில் இன்று சாவடைந்துள்ளார். பாடகர், நடிகர், தொழிலதிபர், அமைச்சர், தொழில்முனைவர், எனப் பல வழிகளில் மிகத் திறமையாக இருந்த இவர், தனது 78 வது வயதில் புற்றுநோயினால் சாவடைந்துள்ளார்.
நட்டத்தில் சென்ற அடிடாஸ் (Adidas) இனை வாங்கித் தனது தொழில் திறமையினால மீண்டும் அதனை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருந்தார்.
முன்னாள் மிகச் சிறந்த ஜனாதிபதியான பிரோன்சுவா மித்ரோனுடன் மிக நெருக்கமாக இருந்த இவர், 1992 இல் நகரங்களின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
உதைபந்தாட்ட ரசிகர்களிற்கு, முக்கியமாக ஒலிம்பிக் து மார்செய் (Olympique de Marseille) அணியின் இரசிகர்களிற்கு இவர் மிகவும் பிரபலமானவர். OM அணியை வாங்கிய இவர், 1993 ஆம் ஆண்டில் ligue des champions இனை மார்செய் அணியை வெற்றி பெற வைத்தார்.
பிரபலத்துடன் இவர் மீது பல நிதி மோசடி வழக்குகளும் பல இருக்கின்றன.
அண்மையில் இவரும் இவரது மனைவியும், இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையார்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுப் பலத்த காயங்களிற்கும் உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.