SNCF சலுகை அட்டை (la carte Avantage) விலை அதிகரிக்கிறது
SNCF நிறுவனத்தின் தொடருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க பயன்படுத்தப்படும் ‘சலுகை அட்டை’ (la carte Avantage) விலை இன்று முதல் அதிகரிக்கிறது.
இன்று ஓகஸ்ட் 29 ஆம் திகதியில் இருந்து இந்த அட்டைகளின் விலை €10 யூரோக்களால் அதிகரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தொடருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது பயண தூரத்தை கணக்கிட்டு இந்த சலுகை அட்டைகளை பயன்படுத்துகிறார்கள். ஒன்றரை மணிநேரங்கள் பயணிப்பவர்கள் பயன்படுத்தும் €39 யூரோக்கள் பெறுமதியுள்ள குறித்த அட்டை இன்று முதல் €49 யூரோக்களாக அதிகரிக்கிறது.
ஒன்றரை மணிநேரத்தில் இருந்து 3 மணிநேரம் வரை பயணிப்பவர்களுக்கான €59 யூரோக்கள் பெறுமதியுடைய குறித்த பயண அட்டை இன்று முதல் €69 யூரோக்களாக அதிகரிக்கிறது.
மூன்று மணிநேரத்துக்கு மேல் பயணிப்பவர்களுக்கான €79 யூரோக்கள் பெறுமதியான அட்டை €89 யூரோக்களாக அதிகரிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த கட்டண அதிகரிப்பு பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த la carte Avantage அட்டையை பயன்படுத்தி பரிசில் இருந்து ரென் (Paris-Rennes) நகருக்கு பயணிப்பதற்கு கட்டணமாக €90 யூரோக்கள் கட்டணம் செலுத்தவேண்டும். அது இல்லை என்றால் €98 யூரோக்கள் செலுத்த வேண்டும். விலை அதிகரிப்பினால் பெரிய அளவில் பயணிகள் இலாபம் அடையவில்லை என விமர்சித்துள்ளார்கள்.