உலகம்
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு

போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாகவும், இதில் ஐரோப்பா ஒரு பங்கை வகிக்கும் என்றும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07)மேலும் படிக்க...
ஈரானின் பில்லியன் கணக்கான டொலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, ஈரானியச் சொத்துக்களை வளைத்து, அவற்றைக் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும்மேலும் படிக்க...
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் 49 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மாலியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணித்த பாரவூர்தியொன்று, சஹாரா பாலைவனத்தில் பயணித்த வேளையில் பழுதடைந்ததால் அதில் பயணித்த 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜர் மற்றும் அல்ஜீரியாவுக்கு இடையிலான பிரதான எல்லைக் கடவையானமேலும் படிக்க...
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கணிசமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளன. அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.94 டொலர்களால் (2.69%) வீழ்ச்சியடைந்து, 90.54 டொலராகப் பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ரகமேலும் படிக்க...
சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியா பயணம்!

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ( Xi Jinping) அடுத்த வாரம் வட கொரியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தின்போது, ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரிய ஜனாதிபதி கிம்மேலும் படிக்க...
புட்டினுக்கு பகிரங்க கடிதம்; நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர் நிறுத்தம் ஒன்றிற்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக புட்டினுடன் நேருக்கு நேர்மேலும் படிக்க...
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

வோஷிங்டனில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் போது, போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பின்னரும், வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த போர்நிறுத்த அறிவிப்புக்கு முன்னர், தெற்கு லெபனானின்மேலும் படிக்க...
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு (Thaksin Shinawatra) மன்னரின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவலைமேலும் படிக்க...
பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்

வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் புதன்கிழமையன்று (03) வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தது. பஹ்ரைன், குவைத் மற்றும் பிற பிராந்திய இலக்குகள் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன அல்லது தோல்வியடைந்தனமேலும் படிக்க...
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா தாக்குதல்களை நிறுத்த இணக்கம்

அமெரிக்காவின் திட்டத்திற்கு அமைய, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த ஹிஸ்புல்லா அமைப்பு இணங்கியுள்ளதாகவும், அதற்குப் பதிலாக லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல்களை நடத்தாதிருக்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாகவும் லெபனான் தெரிவித்துள்ளது. “தாக்குதல்களை பரஸ்பரம் நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்றுக்கொண்டதைமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம் பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து வௌியேற உத்தரவிடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வௌியே உள்ள வேறு ஏதேனும் ஒரு ‘மூன்றாம் நாட்டில்’ அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான புதிய விதிமுறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்,மேலும் படிக்க...
லெபனானில் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்

தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பியூஃபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தனது தாக்குதலில் இது ஒரு தீர்மானமான திருப்புமுனை என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விவரித்துள்ளார். லிட்டானி நதி என்ற தங்களின் அசல் எல்லைக்மேலும் படிக்க...
ஆய்வக ஆண் நுளம்புகளைப் பொதுவெளியில் விட அனுமதி கோரும் Google

கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 3.2 கோடி ஆண் நுளம்புகளைப் பொதுவெளியில் விடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் Google நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இந்த ஆய்வக ஆண் நுளம்புகள் பொதுவெளியில் உள்ள பெண் நுளம்புகளுடன் இணையும்மேலும் படிக்க...
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளதாக தொழில்நுட்பத் துறை செயலாளர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசேட ஆய்வு அறிக்கைமேலும் படிக்க...
கென்யா பாடசாலை தீ விபத்தில் 16 மாணவிகள் பலி: திட்டமிட்டு தீ வைத்ததாக 8 மாணவிகள் கைது

கென்யாவில் உள்ள பெண்கள் பாடசாலையில் 16 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மாணவிகள் மற்றும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சீ.சீ.ரி.வி. காட்சிகளின் தடயவியல் ஆய்வுக்குப் பின்னர்மேலும் படிக்க...
தாறுமாறாக எகிறும் AI செலவுகள்: ஒரே மாதத்தில் 500 மில்லியன் டொலர் கட்டணம்

பணியிட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை அன்றாட பணிகளுக்கு ஏஐ பயன்படுத்துமாறு ஊக்குவித்து வருகின்றன. ஆனால், இந்த அதீத நம்பகத்தன்மை நிறுவனங்களுக்கு எதிர்பாராத வகையில் இமாலயச் செலவுகளைக்மேலும் படிக்க...
சீனாவில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்

சீனாவின் ஷின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துர்பான் (Turpan) நகருக்கு அருகில் 5.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (29) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:55 மணியளவில்மேலும் படிக்க...
காசாவின் 70% நிலப்பரப்பை ஆக்கிரமிக்க இஸ்ரேல் இராணுவத்திற்கு நெதன்யாகு உத்தரவு

காசா நிலப்பரப்பின் 70 வீதத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் நடைபெற்ற மாநாடொன்றில் பேசிய அவர், காசாவின் 60 வீதப் பகுதி தற்போது இஸ்ரேலின் வசம் உள்ளதாகவும்,மேலும் படிக்க...
3 வருடங்களாக விவசாயியின் வயிற்றுக்குள் இருந்த பிரம்மாண்ட கல்

சீனாவின் தெற்கு குவாங்டாங் (Guangdong) மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சென் (Chen) என்ற விவசாயி, கடந்த மூன்று வருடங்களாகச் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான மரண வேதனையை அனுபவித்து வந்த நிலையில், இறுதியாக மருத்துவமனைக்குச் சென்றபோது அவரது சிறுநீர்ப்பையில் (Bladder)மேலும் படிக்க...
பெண் வேடத்தில் சென்ற ஆண் காவல்துறை அதிகாரிகள்: தாய்லாந்தில் நடந்த அதிரடி கைது

தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தில் நடைபெற்ற வீதி நடனத் திருவிழா ஒன்றின் போது, ‘மேகா பா-வாப்-வாப்’ என்ற போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக ஐந்து ஆண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரி எனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 172
- மேலும் படிக்க
