உலகம்
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்

கெமரூன் நாட்டின் டூவாலா நகரில் அமைந்துள்ள நியூ பெல் சிறைச்சாலை, ஒரு தனி நகரைப் போலச் செயல்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சிறைக்குள், கைதிகள் தங்களுக்குள்ளேயே ஒரு சுவாரசியமான அமைப்பை உருவாக்கியுள்ளனர். இங்கு செய்திகளைமேலும் படிக்க...
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன் – நீதிமன்றில் உணர்ச்சிபூர்வ வாக்குமூலம்

லெகஸி (Legacy) சம்பவம் தொடர்பான வழக்கில் உயிரிழந்த 89 வயதான மார்க் ஹோதம் என்பவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழங்கிய பாதிப்பு அறிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 2023 செப்டம்பர் 10ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த மார்க் ஹோதம் தொடர்பாக, அவரது மருமகன்மேலும் படிக்க...
பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்மேற்கு பிரான்ஸில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும்மேலும் படிக்க...
விடுமுறை முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

யுக்ரைனின் ஜாபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள விடுமுறை முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோதேமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் குழந்தைகளைக் கடத்திய வழக்கில் 18 பெண்கள் உட்பட19 பேருக்குச் சிறைத் தண்டனை

இந்தோனேசியாவில் 34 குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 19 பேருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கடத்தல் வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்ட 70 வயது வயோதிபப் பெண் ஒருவருக்கு அதிகபட்சமாக ஏழாண்டுகள் சிறைத்தண்டனைமேலும் படிக்க...
16 வருடங்களாக விசித்திரமான இடமாற்றங்களுக்கு உள்ளான ஆர்ஜன்டீன முதல் பெண்மணியின் உடலம்

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி ஈவா பெரோன் 1952 ஜூலை 26 அன்று புற்றுநோயால் தனது 33 ஆவது வயதில் உயிரிழந்தார். இந்தநிலையில் பெரோனின் கணவரும் ஜனாதிபதியுமான ஜுவான் பெரோனின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது உடல் ஸ்பானிய உடற்கூறியல் நிபுணர் பெட்ரோமேலும் படிக்க...
கயானா கடற்கரைக்கு அப்பால் 133 பேருடன் பயணித்த படகு கவிழந்தது

கயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்; அதேவேளையில், காணாமல் போன டஜன் கணக்கானவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிமேலும் படிக்க...
சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும்மேலும் படிக்க...
சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து – 20 மாணவர்கள் உயிரிழப்பு

உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15மேலும் படிக்க...
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பயனளிக்கும் அனைத்து முக்கிய ஏற்றுமதி கடல் வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ எச்சரித்துள்ளது. ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மேலும் படிக்க...
முதல் முறையாக 25 டிரில்லியன் யுவானைத் தாண்டியது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம்

இந்த ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் உகந்த அளவில் உள்ளது என சீன சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று (14) வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த இறக்குமதி மற்றும்மேலும் படிக்க...
6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு – புதிய கண்டுபிடிப்பு

நியூ கினியாவின் தாவோரா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்புப் படிமத்தின் மூலம், இராட்சத கங்காரு இனம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததுள்ளமை உறுதியாகியுள்ளது. Protemnodon tumbuna என்ற இந்த இராட்சத கங்காரு இனம், மற்றைய கங்காருகள் போல் குதிக்காமல் நான்குமேலும் படிக்க...
தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து – 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல்மேலும் படிக்க...
மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதை தொடர்ந்து 140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை “மறு அறிவித்தல் வரை”மேலும் படிக்க...
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் பூகுவோக் (Phu Quoc) தீவுக்கு அருகே கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று தனது விநியோகஸ்தர்களைமேலும் படிக்க...
தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்

சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தனது முடிவைமேலும் படிக்க...
சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூரத் தீவுக்கூட்டம் ஒன்றை நோக்கி நகரும் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் இன்று (10) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவு மிகமேலும் படிக்க...
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது. புதன்கிழமை அன்று தெற்கில் உள்ள கராச்சி துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 174
- மேலும் படிக்க

