சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கணிசமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளன.
அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.94 டொலர்களால் (2.69%) வீழ்ச்சியடைந்து, 90.54 டொலராகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை1.94 டொலர்களால் (0.37%) வீழ்ச்சியடைந்து, 93.09 டொலராகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 0.107 டொலர்களால் (3.21%) குறைவடைந்து, 3.229 டொலராகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
