இலங்கை
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமைமேலும் படிக்க...
பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை மீது துப்பாக்கி சூடு ; இராணுவ வீரர் கைது

காலி – அக்மீமன பகுதியில் இராணுவ சிப்பாயின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தமையையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மிமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானவில பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இராணுவமேலும் படிக்க...
“இலங்கை முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா கடன்களை வழங்குகிறது என்ற கருத்து முற்றிலும் பொய்”

சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபியமேலும் படிக்க...
27 வருடங்களின் பின்னர் தமது காணிகளை அடையாளம் காட்டிய மக்கள்

யாழ்.கீரிமலை பகுதியில் ஜனாதிபதி சொகுசு மாளியையை சூழவுள்ள 62 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அடையாளம் காட்டினர் இந்த நடவடிக்கையில் பொதுமக்களின்மேலும் படிக்க...
வவுனியாவில் சில பிரதேசங்களில் நில அதிர்வு

வவுனியா, தாண்டிக்குளம் மற்றும் பத்தினியார்மகின்லன்குளம் ஆகிய பிரதேசங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 09.52 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில வினாடிகள் இந்த நடுக்கம் நிலவியுள்ளதாகவும், சில வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாகமேலும் படிக்க...
எதிர்கால சந்ததியை சிறந்த முன்னோடிகளாக மாற்ற வரலாற்று அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும்
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். உயர் கல்வியை பெற்றாலும் நாட்டை நேசிக்கும் நாட்டின் மீது பற்றுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கமேலும் படிக்க...
ஜனாதிபதியின் விடுதலைப்புலிகள் சம்பந்தமான கூற்று நம்பிக்கைத் துரோகமானது – பிரபா கணேசன்

அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் போதைவஸ்து வியாபாரம் செய்தே யுத்தம் நடத்தினார்கள் என்று தெரிவித்திருப்பது அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த பாரிய துரோகமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும்மேலும் படிக்க...
இலங்கை முஸ்லீம்களை பாதுகாக்க தவறுகின்றது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

முஸ்லீம்களை கண்மூடித்தனமாக கைதுசெய்வது உட்பட அவர்களிற்கு எதிரான அனைத்து துஸ்பிரயோகங்களையும் இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பௌத்த தேசியவாதிகளால் முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகள்மேலும் படிக்க...
ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான பணம் – குற்ற விசாரணை பிரிவு தீவிர விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் மனைவியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிதேர் மொஹமட் சஹாப்தீன் ஆயிஷா என்பவரின் தனியார் வங்கி கணக்கில் 50 கோடியே 50 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
புலிகளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது, முட்டாள் தனமானது – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

தமிழ் மக்களின் உரிமைக்காகவே வே.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள் அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது படு முட்டாள் தனமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ,மேலும் படிக்க...
அதிபரின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்

சிறிலங்கா அதிபரின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டமா அதிபர் நேற்று அடிப்படை எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் உத்தரவை தடை செய்து உத்தரவிடக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல் – மைத்திரிபால
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க பலர் முயற்சிக்கின்றனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக்மேலும் படிக்க...
ஹேமசிறியும், பூஜிதவும் மருத்துவ மனைகளிலேயே விளக்கமறியல்

கொழும்பு மருத்துவனைகளில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுத்தத் தவறினார்கள் என்றமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் எவரும் எம்மிடம் சரணடையவில்லை! இராணுவம் அறிவிப்பு

இறுதி யுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகை ஒன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே குறித்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அதிகாரியானமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு Common ground award

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான Common ground award என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க முன்னெடுத்த பணிகளுக்காக இந்த விருதுமேலும் படிக்க...
ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் சிஐடியினரால் கைது!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக இவர்கள் இருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால்மேலும் படிக்க...
சிறிலங்காவில் அமெரிக்க தளத்தை நிறுவும் நோக்கம் இல்லை – அலய்னா

சிறிலங்காவில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவுகின்ற நோக்கமோ, திட்டமோ கிடையாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள சோபா உடன்பாட்டு வரைவை, கொழும்பு ஊடகங்கள் பலவும், வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் தமது கீச்சகப் பதிவு ஒன்றில்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றையதினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு இலங்கைக்கு சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்யப்படுமாகமேலும் படிக்க...
விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் நாங்கள் ஜனாதிபதிக்கு கூறமுடியும் ; எம்.கே.சிவாஜிலிங்கம்
ஜனாதிபதிக்கு விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியாது விட்டால் அந்த வரலாற்றை நாங்கள் கூறமுடியும் இதனை விடுத்து தேவையற்ற கதைகளை கதைக்காது மீதமாகவுள்ள காலத்தில் வாக்களித்த மக்களுக்கு பயனுள்ளதாக எதையாவது செய்யவேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர்த்து வேறுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 371
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- …
- 407
- மேலும் படிக்க

