Main Menu

27 வருடங்களின் பின்னர் தமது காணிகளை அடையாளம் காட்டிய மக்கள்

யாழ்.கீரிமலை பகுதியில் ஜனாதிபதி சொகுசு மாளியையை சூழவுள்ள 62 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அடையாளம் காட்டினர்

இந்த நடவடிக்கையில் பொதுமக்களின் காணிகளை  விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக காணிகளை இனங்காணும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.

இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன் , இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரை தொடர்பு கொள்வதனூடாக தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை நேற்றய தினம் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையின்போது 27 வருடங்களுக்கு பின் தமது சொந்த நிலத்திற்கு திரும்பிய மக்கள், கண்ணீருடன் தமது காணிகளை அடையாளம் காண்பித்ததுடன், தமது காணிகளை மிக விரைவாக தம்மிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டனர்.

இதேவேளை இந்த அளவீட்டு நடவடிக்கையின்போது ஆளுநருடன், நில அளவை அதிகாரிகள் தெல்லிப்பளை பிரதேச செயலா், வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளர் நில உரிமையாளர்கள் சென்றிருந்தனர்.

இதேவேளை காணிகளை அடையாளப்படுத்துவதற்காக அதிகளவிலாள மக்களும் ஊடகவியலாளர்களும் அங்கு சென்றிருந்தபோதும் காணியின் உரிமையாளர்கள் மட்டுமே உட்செல்வதற்கு அனுமதிவழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...