Main Menu

“இலங்கை முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா கடன்களை வழங்குகிறது என்ற கருத்து முற்றிலும் பொய்”

சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது.

இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபிய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு  ஒரு சதவீத வட்டியுடனான கடன்களை வழங்கி வருகிறது என்று கடந்த மாதம் 13 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார கூறியிருந்தார். 

இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இலங்கையில் மேற்கொள்ளப்படும் சில அபிவிருத்தித் திட்டங்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கம் இலகு கடன்களை மாத்திரமே வழங்குகின்றது. நட்பறவு பேணும் இலங்கை மக்கள் தரமான சிறந்ததொரு வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு எமது பங்களிப்பினைச் செய்யும் நோக்கிலேயே இக்கடன் வழங்கப்படுகிறது’ என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

பகிரவும்...