இலங்கை
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 46ஆம் ஆண்டு நினைவேந்தல்
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 46ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி முன்பாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது.கடந்த 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில்மேலும் படிக்க...
முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக் கழகத்தில் ஆரம்பம்!
முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. ‘வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்’ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாடு யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை பிரிவின் ஏற்பாட்டில், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண் காணிப்பகம் வலியுறுத்தல்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவது என்ற அதன் உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கடந்தமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவிக்கு TID அழைப்பு
வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் 1055 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே கா.ஜெயவனிதா இந்த விடயம்மேலும் படிக்க...
எமக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலத்தில் நாம் நிற்கின்றோம் – சிறிதரன்
தேசிய விடுதலைககாக போராடிய எமது சமூகம் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “தேசிய விடுதலைககாக போராடிய எமது சமூகம் இன்று மிகமேலும் படிக்க...
எனது கொள்கையுடன் ஒத்துப் போகின்ற பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் – ஜனாதிபதி வேண்டுகோள்!
தனது கொள்கையினை செயற்படுத்தும் அரசாங்கத்தை பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் சம்மேளனத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மக்களால் தெரிவுமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு சவுதிக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சவுதிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சவுதிமேலும் படிக்க...
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது ஐ.தே.க.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிக்கையைத் தொகுத்து, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரியை CIDயில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸ்,மேலும் படிக்க...
யாழில் ‘தமிழமுதம்’ நிகழ்வு ஆரம்பம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இவ்விழா இவ்வருடம் ‘மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது.மேலும் படிக்க...
தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமா?: சிறுபிள்ளைத் தீர்மானங்கள் வேண்டாம் – சரத்
இலங்கைக்கும், உலகத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியைமேலும் படிக்க...
தீர்வை எட்டுவதற்கு எமது மக்கள் தயாராக உள்ளனர் : ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பதே எமது எதிர்பார்ப்பு – சுமந்திரன்
இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையினையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வொன்றினை எட்டுவதற்கு எமது மக்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையானது பிரச்சனை உருவாவதற்கு வழி சமைத்து அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்துமேலும் படிக்க...
பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் – நாடாளுமன்றில் சுமந்திரன்
ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதேமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு வாக்களிக்காதவர்கள் கூட அவருக்கு ஆதரவை வழங்க ஆரம்பித்து விட்டனர்- டக்ளஸ்
ஜனாதிபதியின் செயற்பாடுகளைக் கண்டு, இன்று அவருக்கு வாக்களிக்காதவர்கள்கூட ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “இன்று ஒட்டுமொத்த நாடும் ஜனாதிபதி கோட்டாபயமேலும் படிக்க...
2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை: விமலவீர திஸாநாயக்க
2009ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான் இருந்தது என வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நியாயமாகாது : வேல்ட் விஷன் லங்கா அமைப்பு கண்டனம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் வெகுவாக கவனம் செலுத்தியிருப்பதுடன், எத்தகையதொரு சூழ்நிலையிலும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நியாயமாகாது என்று வேல்ட் விஷன் லங்கா அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் வேல்ட் விஷன் லங்கா அமைப்புமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக இலங்கை கருத்து!
ஈரான் இராணுவ தளபதியின் படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மூத்த ஈரானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து இலங்கைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பாக நாளை விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிகழ்த்தப்பட்ட கொள்கைப் பிரகடன உரை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில், நாளை பிற்பகல் 1.00 மணி முதல் 6.30 மணிவரையும், அதன் பின்னர் நாளை மறுதினம் பிற்பகல் 1.00 மணிமேலும் படிக்க...
சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கோணாவில் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணி ஊற்றுபுலம் சந்திவரை முன்னெடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 352
- 353
- 354
- 355
- 356
- 357
- 358
- …
- 435
- மேலும் படிக்க
