Main Menu

முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக் கழகத்தில் ஆரம்பம்!

முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

‘வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்’ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

குறித்த மாநாடு யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை பிரிவின் ஏற்பாட்டில், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இன்றைய நிகழ்வின் போது ஆய்வரங்க கட்டுரை வெளியீட்டு தொகுதியை தமிழ்த்துறை தலைவர் இரகுநாதன் வெளியிட்டு வைக்க, தகுதி வாய்ந்த அதிகாரி கந்தசாமி பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி கலந்து கொண்டிருந்த அதேவேளை, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வருகை தந்துள்ள பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டு நிகழ்வுகள் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...