Main Menu

இலங்கை

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் சந்திரசேகர் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து, காணாமல் போன மீனவர்களின் உறவினர்களையும் சக கடற்தொழிலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார் இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் பின்வரும் உறுதிமொழிகளை வழங்கினார்: காணாமல் போன மீனவர்களுக்கு வங்கிப் பாக்கிக் கடன்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செலுத்துவதற்குரிய அல்லது தீர்ப்பதற்குரிய உரிய நடவடிக்கைகளை அமைச்சரவை முன்னெடுக்கும். படகுகள் மற்றும் இயந்திரங்கள்:மேலும் படிக்க...