Main Menu

எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள் ; அரசியல் நோக்கத்துக்காக மகனை பலிகொடுக்க என்னால் முடியாது – சுரேஸ் சலேவின் தாய் கோரிக்கை

எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காக நான் அவரை ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கத்துக்காக பலிகொடுக்க என்னால் முடியாது என்று சுரேஸ் சலேவின் தாய் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை அர்ப்பணிக்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் என்னை போன்றே போராட நேரிடும் என்றும் சுரேஸ் சலேவின் தாய் தெரிவித்துள்ளார்.