இலங்கை
பாடகர் சங்கீத்சனின் கைதுக்கு சாணக்கியன் கண்டனம்

வட மாகாணத்தைச் சேர்ந்த பாடகர் சங்கீத்சன் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார். சந்திவெளிமேலும் படிக்க...
யாழ் – புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி காவல்துறையினர் சூரியன் செய்திச் சேவைக்குத் உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்களின் நிலை சற்று மோசமாக உள்ளதாக காவல்துறையினர்மேலும் படிக்க...
டெங்கு அதிவேக பரவல்: வைத்திய சாலைகளின் கொள்ளளவை மீறும் நோயாளர்கள்

டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 35,000 ஐக் கடந்துள்ளதுடன், பதிவாகியுள்ளமேலும் படிக்க...
பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றம் செல்லும் சட்டத்தரணி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு விடுதலை கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்படி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கான, ஆவணங்கள் மற்றும் சத்தியக் கடதாசியில்மேலும் படிக்க...
இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இலங்கையில் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை மேலும் 1.3 மில்லியனால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள புதியமேலும் படிக்க...
செம்மணியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று நடைபெற்றன. அதன்போது 13மேலும் படிக்க...
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி: இது பொருளாதார நெருக்கடி அல்ல – பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது ஒரு பொருளாதார நெருக்கடி அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாகவேமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ‘காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலையான சுற்றுச்சூழலைமேலும் படிக்க...
குவைத் விமான நிலைய தாக்குதலில் இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை குடிமக்களின்மேலும் படிக்க...
உலக சுற்றாடல் தினம் இன்று

உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும் . 1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளாவிய ரீதியில் எழும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகத் தலைவர்கள்மேலும் படிக்க...
தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து பொது மக்களிடமிருந்து முன் மொழிவுகளை கோரும் நாடாளுமன்றம்

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொதுமக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன பத்தாவது நாடாளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக)மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; காவல் துறை விளக்கம்

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்குமேலும் படிக்க...
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன்மேலும் படிக்க...
குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) நடந்த ஈரான் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது. இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், குவைத்தின் பிரதான விமான நிலையம் (T1) மீதான தாக்குதலில் மூன்றுமேலும் படிக்க...
தயாளினி திலீபன் வழக்கு: வீட்டிலேயே இக்குற்றச் சம்பவம் நடை பெற்றுள்ளமை உறுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, விரிவுரையாளரின் வீட்டிலேயே இக்குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளது தெளிவாகுவதுடன், விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமைமேலும் படிக்க...
இலங்கையில் 20% மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேமேலும் படிக்க...
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்காக 2026.05.31 அன்று சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் (01) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம்மேலும் படிக்க...
முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப் பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர். எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 467
- மேலும் படிக்க

