இலங்கை
படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் – அரசாங்கம்

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில், இலங்கையில் யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்குமேலும் படிக்க...
முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு நகரில் மீனவர்களினால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,மேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்கள் விற்பனை ; சந்தேக நபர் கைது
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து 40 வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிபென்ன பட்டேகொட, வலகெதர பிரதேசத்தில் வைத்து சந்தேகமேலும் படிக்க...
13ஆம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துகள் முரணானவை – ஞானமுத்து சிறிநேசன்

13ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் உள்ள மாகாணசபை அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரணானதாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்துமேலும் படிக்க...
பதுக்கி வைக்கப் பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் அரிசி தட்டுப்பாட்டை நீக்க முடியும் – தேசிய கமக்காரர் அதிகார சபை

விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் அரிசி தட்டுப்பாட்டை நீக்க முடியும் என தேசிய கமக்காரர் அதிகார சபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்தார். தேசிய கமக்கார அதிகார சபையின் ஊடகமேலும் படிக்க...
கஜேந்திரகுமாரின் வாகனம் மோதி பெண் பலி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த ஜீப்மேலும் படிக்க...
சொத்து விபரங்களை வெளியிட்ட 7,905 பொதுத் தேர்தல் வேட்பாளர்க

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7,905 வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரத்திரட்டுக்களை ஒப்படைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 7,412 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்களின் சார்பில் போட்டியிட்ட 493 வேட்பாளர்களும்மேலும் படிக்க...
நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,804,873மேலும் படிக்க...
பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடுகடத்த நடவடிக்கை

ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிவுறுத்தலுக்கமைய அவருக்கு எதிராக சர்வதேச காவல்துறை பிடியாணை பிறப்பித்திருந்தது. அவர் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர்மேலும் படிக்க...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

சீனாவுக்கு ஆதரவாகச் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காது எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சூரியனின் செய்திப்பணிப்பாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில்மேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேகமேலும் படிக்க...
ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் பங்களிப்பு இன்றியமையாதது – சஜித்துடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார செழிப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமையளித்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஐக்கியமேலும் படிக்க...
அமெரிக்க பிரதிநிதிகள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு (USAID) மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்மேலும் படிக்க...
அரசியலமைப்பு சபைக்கு 2 உறுப்பினர்கள் நியமனம்
அரசியலமைப்பு சபைக்கு இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி எதிர்க்கட்சி தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுபான்மை கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், அரசியலமைப்புமேலும் படிக்க...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரானார் ஜீவன் தொண்டமான்

நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இதில் 46,438 அதிகூடிய விருப்புமேலும் படிக்க...
ஆராய்ச்சி, சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடந்த 75 வருடங்களில் நாடு பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு மருத்துவ பீடத்தில் வெள்ளிக்கிழமை (06) தேசிய விஞ்ஞானமேலும் படிக்க...
பிணையில் வெளிவந்த லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்த ஆதரவளிக்கத் தயார் ; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் உறுதி

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் பாராளுமன்றத்தை கூட்டி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்துக்கு இணக்கம் இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவோம். அதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மேலும் படிக்க...
கொழும்பு, வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் புத்தசாசன அமைச்சர் வழிபாடு

கொழும்பு, வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கத்தின் அழைப்பின்பேரில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்மேலும் படிக்க...
COPA குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- …
- 442
- மேலும் படிக்க
