இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் ‘இருதரப்ப-கூட்டுவெற்றி’ என்ற கோட்பாட்டுடன் அனைத்துமேலும் படிக்க...
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நேற்று இரவு (17) நாடு திரும்பினார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போதுமேலும் படிக்க...
நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு உடன் படிக்கையையும் கைச் சாத்திடவில்லை : விஜித ஹேரத்
நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எட்கா உடன்படிக்கை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்து தெரிவித்த கருத்துகளை தற்போது மீளப் பெறத் தயாரா? எனமேலும் படிக்க...
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதிமேலும் படிக்க...
சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி

கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 5,000க்கும் மேற்பட்ட சைகை மொழி பேசுபவர்கள் இருக்கின்ற போதும்மேலும் படிக்க...
கல்வித் தகைமையை வெளிப் படுத்தினார் எதிர்க் கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரையான கல்வியை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும் கற்றதாக சபையில் எதிர்க் கட்சித்மேலும் படிக்க...
அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை

அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் முன்னெடுக்கும் பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் எக்கோனமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அடிப்படையில் எங்கள் முதலீடுகள்,மேலும் படிக்க...
கல்வித் தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் பதவியிலிருந்து விலகத் தயார் – நாமல் சவால்
சட்டப் பரீட்சைக்குத் தாம் முகம் கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த அவமதிப்பு நாமல் ராஜபக்சவை இலக்காகக் கொள்ளவில்லை என்றும், முழுச் சட்ட அமைப்பையும் குறிவைத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவேமேலும் படிக்க...
பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
நாமல் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்கு உள்ளாக்குகிறார் – வசந்த சமரசிங்க

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை முழுமையாக மீறி தனி அறையில் இருந்து சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்குள்ளாக்குகிறார். முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என வர்த்தகம், வாணிபம்,மேலும் படிக்க...
தமிழகத்திலுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகளை மீளவும் வரவழைப்பதே எமது விருப்பம் – வடக்கு மாகாண ஆளுநர்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர்மேலும் படிக்க...
13 ஆம் திருத்தத்தை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் வலியுறுத்தலை வரவேற்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினால் வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனுள் 13 ஆவது திருத்தமும் உள்ளடங்குவதனால் அவ்வலியுறுத்தலை தாம் வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இருப்பினும் அவற்றை கூட்டறிக்கையில் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட்டிருக்காவிடின்,மேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு – பிரதமர்

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், எம்.பிகளின் பெயர் பட்டியல் வெளியானது

2005 – 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று (17) பகிரங்கப்படுத்தினார். முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவுக்குமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த முப்படை பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தார் இதுவரை வழங்கப்பட்டு வந்த முப்படை பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுமேலும் படிக்க...
கோட்டாபய அரசாங்கம் தான் தோன்றித்தனமாக செயற்பட்டது – எதிர்க் கட்சித் தலைவர்
கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொவிட் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும்,மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது.மேலும் படிக்க...
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷலமேலும் படிக்க...
புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து சபை முதல்வர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- …
- 442
- மேலும் படிக்க


