இலங்கை
தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் – இந்தியப் பிரதமர் மோடி

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவைமேலும் படிக்க...
மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவுக்கு பயணிப்பது இரண்டாவது தடவையாகும். ரணில் விக்ரமசிங்கவின் இந்தமுறை இந்தியா பயணத்தின்போது பல விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்மேலும் படிக்க...
இந்திய பிரதமரை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி அநுர

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (16) புதுடில்லியில்மேலும் படிக்க...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின

இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது மற்றும் அரச அதிகாரிகளின் திறனை முன்னேற்றுவது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்றுமேலும் படிக்க...
தாயை கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன் ; இரத்தினபுரியில் சம்பவம்
82 வயதுடைய தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இரத்தினபுரி, கொடகவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிசோகொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொடகவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
நீதியமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தனது கல்வித் தகைமை தொடர்பில் பிழையான தரவுகள் நாடாளுமன்றத் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். தான் கடந்த 25 வருடங்களாக சட்டத்தரணியாக இருப்பதாகவும் தமதுமேலும் படிக்க...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப் பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர் மனோ கணேசன், நிஸாம் காரியப்பர்,சுஜீவ சேனசிங்க ,முது மொஹமட் ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர் இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவைமேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் இந்திய இராஜ தந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகை தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த கலந்துரையாடல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியமேலும் படிக்க...
இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்து விடப் போவதில்லை ; மாறாக நாம் வளர்வோம் – வேதநாயகன்

இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கைமேலும் படிக்க...
சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை

மிகவும் சிக்கலான மற்றும் சவாலான சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள நிதியமைச்சு, இறையாண்மை பத்திர உரிமையாளர்களில் 98 சதவீதமானோர் பத்திர பரிமாற்றத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக்மேலும் படிக்க...
தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று (14) தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும்மேலும் படிக்க...
யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டுமெனக் கோரிக்கை

சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்மேலும் படிக்க...
முதல் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப் பயணமாக இன்று (15) பிற்பகல் இந்தியா சென்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி 17 ஆம் திகதி வரையில் இந்தியாவில் தங்கியிருப்பார்.மேலும் படிக்க...
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும்மேலும் படிக்க...
சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 10ஆவது நாடாளுமன்றத்தின் 12ஆவது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட அசோக ரன்வல, தமது கல்வித் தகைமை தொடர்பில்மேலும் படிக்க...
தொழில் வாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறிய 300,000ற்கும் அதிகமானோர்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 300,000ற்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று (13) வெளியிட்ட தரவுகளுக்கு அமைய 300,162 இலங்கையர்கள் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காகச் சென்றுள்ளனர். அவர்களில் 177, 804 ஆண்களும், 122, 358மேலும் படிக்க...
பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (13) இடம்பெற்றுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த உதவுங்கள் – கிழக்கு பெண் மனித உரிமை அமைப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. இன்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- …
- 442
- மேலும் படிக்க
