மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை இவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும்.
மத்திய அரசின் பி.எம். திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நிலைப்பாட்டை தான் இந்த அரசும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும்.
கேள்வித்தாள் வெளியான சம்பவத்தால், தேர்வு எழுதிய அனைவரும் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
