Day: May 18, 2026
சீனாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு : இருவர் உயிரிழப்பு – 7000க்கும் அதிகமானோர் அவசரமாக வெளியேற்றம்!

சீனாவின் தென்மேற்கு பகுதியான குவாங்சியில் இன்று ஏற்பட்ட நில அதிர்வில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நில அதிர்வையடுத்து 7,000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அதிகாரிகள்மேலும் படிக்க...
வெள்ளவத்தையில் பதற்றம் : கடற்கரையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது இன்று மாலை 5 மணியளவில் வெள்ளவத்தை கடற்கரைப்பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது பாதுகாப்புமேலும் படிக்க...
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு: மஹிந்தவிற்கு அழைப்பில்லை?

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 5 ஆவது நிறைவேற்று அதிகாரம்மேலும் படிக்க...
கேள்வி கேட்கும் திறனை இழக்கும் மனித இனம்: AI கருவிகளால் ஆபத்து என எச்சரிக்கை

கேள்விகளுக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கும் உடனடியாகப் பதில்களை வழங்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் அசுர வளர்ச்சி, மனிதர்களின் புத்தி கூர்மையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கச் செய்யலாம் என லண்டனின் புகழ்பெற்ற கிரீன்விச் ரோயல் அவதானிப்பு நிலையம் (Royal Observatory Greenwich) எச்சரித்துள்ளது. வானியல்மேலும் படிக்க...
பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சட்டத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அதற்காக அவர்களின் பெற்றோர்களும் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் வகையில் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களை அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ள பிரித்தானிய நீதித்துறை அமைச்சர் டேவிட்மேலும் படிக்க...
விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்தில் இன்று (18) நடைபெற்ற ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளை (19)மேலும் படிக்க...
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403-ல் மூலமாக நாட்டிலிருந்து புறப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும்மேலும் படிக்க...
யாழ். பல்கலைக் கழகத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு பூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட, ஏனைய சுடர்கள்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – முதலமைச்சர் ஜோசப் விஜய்

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (x )தலத்தில் ” முள்ளிவாய்க்கால் நினைவுகளைமேலும் படிக்க...
இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து

மேற்கு இடாஹோவில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடந்த விமானக் கண்காட்சியின் போது, இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர் என்று அமெரிக்கமேலும் படிக்க...
மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை இவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும். மத்திய அரசின் பி.எம். திட்டத்தையோ, மும்மொழிமேலும் படிக்க...
17 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – நிழல்கள் ரவி

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தைமேலும் படிக்க...
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு நாளை

யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்தமேலும் படிக்க...
மல்வானை வீட்டில் இருந்து வௌியேறும் பல்கலை மாணவர்கள்

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்மேலும் படிக்க...
கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (UDF) மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்து இன்று (18) கேரள முதலமைச்சராகப் பதவியேற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் திருவனந்தபுரத்தில்மேலும் படிக்க...
மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில்மேலும் படிக்க...
இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

இலங்கை நாடாளுமன்றத்தின் பெண்கள் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் (Women Parliamentarians’ Caucus) 19 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், கடந்த மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரமேலும் படிக்க...
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுமியில் முள்ளிவாய்க்கால்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு

இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியாமேலும் படிக்க...

