Main Menu

ஆற்று நீரை அருந்த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை

சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் பேர்ன்னுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆரே நதியில் நீந்தும்போது அதன் நீரை அருந்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

அண்மையில் சுவிட்ஸர்லாந்தின் சுற்றுலா இணையதளங்களில், பேர்னிலுள்ள ஆரே (Aare) நதியின் தண்ணீரை அப்படியே அருந்தலாம் என்றும், அது மிகவும் பாதுகாப்பானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இணைய தகவல்களை நம்பி ஆற்று நீரை அருந்த வேண்டாம், அப்படி அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆரே (Aare) நதியில் தண்ணீர் மிக தூய்மையானதுதான், ஆனால் குடிக்கும் அளவிற்கு அது உகந்ததல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த கடும் மழையின் போது வெள்ளம் பெருகியதில் நகரிலுள்ள சாக்கடைகள் பல நிரம்பி நதியில் கலந்துள்ளதால் ஆற்று நீரில் மனிதக் கழிவு கலந்திருப்பதாகவும், அதனால் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆறின் நீரை அருந்துவது உடல் நலனுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள உள்ளூர் மருத்துவர் ஒருவர், ஆற்றில் நீந்தும்போது தற்செயலாக வாய்க்குள் போய்விடும் சிறிதளவு தண்ணீரால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...