Main Menu

அழாதே எழு!

அழுவதும் தொழுவதும் கோழைகள் பழக்கம்.

தமிழ்மகன் உடம்புக்கு தழும்புகள் பதக்கம் …..

அழாதே எழு!

ஏன் அழுகின்றாய் அழுததுகானும் இங்கே யாரும் உன் கண்ணீரை துடைக்க தயாரில்லை.தொழுததும் கானும் இங்கே யாருக்கும் உன் அவலக்குரல் கேட்கவில்லை கேட்டாலும் காதை இறுக அடைத்துக்கொண்டு கேட்காததுபோல் நாடகமாடுகின்றனர்.யாரையும் நம்பி பலனில்லை யாரும் உனக்கான சிறுதுரும்பையும் கிள்ளிபோட போவதில்லை.அழாதே எழு இனியும் நம்பாதே காலம் தாழ்த்தாதே…

மண் அள்ளும் பார ஊர்திகளில் வண்டி வண்டியாக பிணங்களை குவித்தபோது கண்டு கொள்ளாத இவர்கள் மூளைக்குள்ளா உனக்கான நலன் இருக்கபோகின்றது.இருக்கவே இருக்காது இனியும் நம்பாதே.குறைந்த பட்சம் போர்குற்ற விசாரணையைகூட நடத்த மறுக்கின்ற இவர்களா உனக்கான உரிமையை பெற்று தந்துவிட போகின்றனர்.
இனியும் நம்பாதே.

இந்துமாக சமுத்திரத்தின் அந்தபக்கம் இருந்து நாளும் ஓலமிடுபவனாலும் உனக்கு ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை ஏனென்றால் அங்கே அதிகாரம் தமிழர் நலனை விரும்புவரிடத்தில் இல்லை.உண்மையாக உணர்வுகள் அவர்களுக்குள் இருந்தாலும் அவர்கள் ஏற்றுகொண்டிருக்கும் தலைமைகள் மனநிலை மாறாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியப்போவதில்லை.நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக அவர்கள் நடத்தும் அறப் போராட்டங்கள் ஈழத்தமிழினத்திற்காகக நாங்கள் அதை செய்தோம் இதைசெய்தோம் என்று அவர்கள் பட்டியலிடதான் பயன்படுமே தவிர உனக்கு அது எந்த மாற்றத்தையும் தந்துவிடாது.அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாட்டை தவிர்த்து அரசியல் காழ்புணர்ச்சிகளை களைந்து உனக்கென்று ஒன்று கூட மாட்டார்கள்.ஒரே ஒருவன்தான் வீதி வீதியாக தெருத் தெருவாக தொண்டை தண்ணி வற்ற கத்துகின்றான் அவன்மீதும் ஆயிரம் விமர்சனங்கள்.ஆயிரம் குறைகள்.அவன் கரத்தை பலப்படுத்தவும் அவர்கள் தயாரில்லை.இந்தியாவின் மிக வலிமையான பிரதமராக ராஜீவ்காந்தி இருந்த பொழுது அவரை பகைத்துக்கொண்டு எம் ஜீ ஆரால் இத்தனை உதவிகள் எங்களுக்கு செய்ய முடிந்ததென்றால் அதற்க்கு முக்கியகாரணம் ஆட்சி அதிகாரம் மக்கள் செல்வாக்கு அவர் கையில் இருந்தமையால்தான் அது சாத்தியமாயிற்று.ஆட்சி அதிகாரம் அங்க எப்போது தமிழர் விடிவை விரும்புவரிடத்தில் வருகின்றதோ அப்போதுதான் உனக்காவது சிறிதெனினும் செய்ய ஏலும் அதுவரைக்கும் எந்த பெரிய மாற்றமும் அங்கே நிகழ்ந்துவிடப் போவதில்லை.சிந்திக்க தெறியாதவனின் சிந்தனையை தூண்டலாம் சிந்திக்க மறுப்பவனை ஒன்றும் செய்ய ஏலாது.இனியும் நம்பாதே.

“எமது வெற்றி உலகத்தின் கைகளில் தங்கியிருக்கவில்லை எமது கையில் எமது பலத்தில் எமது உறுதிபாட்டிலேயே தங்கியிருக்கின்றது”

இதன் அர்தம் உனக்கு விளங்குதா இல்லையா யாரை நம்பி,யாரை எதிர்பார்த்து அண்ணண் விடுதலைப் போராட்டத்தை துவங்கினார் எந்தெந்த நாட்டிலிருந்து வந்து விடுதலை அமைப்பில் இணைந்து போராடினார்கள்(சில தமிழக உறவுகளை தவிர) யாரும் இல்லை நாம் போராடினது எமது பலத்தில்தான்,நாம் வெற்றிகளை குவித்தது எமது பலத்தில்தான்,நாம் சாதனைகளை படைத்தது எமது பலத்தில்தான்.நாம் நமது பலத்தில் நிமிர வேண்டுமே தவிர யாரையும் எதிர்பார்த்து ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.அப்படி நீ எதிபார்புடன் இருந்தால் காலவிரயமும் ஏமாற்றமுமே உனக்கு மிச்சும்.

எமக்கான உரிமையை எவனாவது பெற்றுதருவான் நாம் ஆளாலாம் வாழலாம் என்று மூலையில் நீ முடங்கிகிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும் எழுந்துநில் துணிந்துசெல் நீ யார் வாழும் காலத்தில் வாழும் தமிழன் தெறியுமா சரித்திர சாதனைகள் பல படைத்து பாருக்கெல்லாம் தமிழையும் தமிழனையும் அறிமுகம் செய்தவனின் காலத்தில் வாழும் தமிழன்.அந்த உன்னத தலைவனின் கரத்தை வலுபடுத்துவோம்.
நம்புவோம்
செயல்படுவோம்
மோதிபார்போம்
வென்றெடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்

பகிரவும்...