Main Menu

அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் தருணம் வந்து விட்டது- டளஸ்

இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் தருணம் வந்துவிட்டதாகவும், இனியும் பிரிந்து செயற்படாமல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய, டளஸ் அழகப்பெரும கேட்டுக் கொண்டார்.

வாக்கெடுப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், இது எமக்கான தோல்வியாக இருந்தாலும், நாம் அனைவரும் இந்தத் தருணத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த நாட்டில் இதுவரை பிரிந்து செயற்பட்ட கட்சிகள் அனைத்தும், இந்தத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிணைந்து செயற்பட்டதை நாம் அவதானித்தோம்.

சுதந்திரத்துக்குப் பின்னரான, கடுமையான காலக்கட்டத்தில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களின் குடும்பங்களை மட்டும் பாராது, இதற்கு வெளியே உள்ள 58 இலட்சம் குடும்பங்கள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் இங்கு ஐக்கியமாக செயற்பட்டால் மட்டுமே, மக்களும் ஒன்றாக எமக்கான ஆதரவை வழங்குவார்கள்.

மக்களிடம் இழந்துள்ள அரசியல் விஸ்வாசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.- என்றார்.

பகிரவும்...