Main Menu

50வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.கனகராஜா கமலாதேவி (01/02/2021)

தாயகத்தில் அரியாலை கஸ்தூரியார் வீதியை சேர்ந்த பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசிக்கும் கனகராஜா (அசோகன்) கமலாதேவி தம்பதிகள் 01ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அமைதியாக தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று 50வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் கனகராஜா கமலாதேவி தம்பதிகளை அன்பு பிள்ளைகள் பிரதீபன்,பிரபா, பார்த்தீபன், தீபா, மருமக்கள் வாசுகி, ஜெகநாதன் (லண்டன்) விஜிதா, சபேசன், பேரப்பிள்ளைகள் கபிலன், மயூரி, மகதி, பிரம்யா,பிரியாஷா,பவிசன், நிபிஷ், அஸ்வின், வைரீஸ், பைரவி மற்றும் சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார், பெறாமக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகித்தாயின் அருளோடும் ஆசியோடும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று 50வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் கனகராஜா கமலாதேவி தம்பதிகளை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பிரதீபன், பிரபா, பார்த்தீபன், தீபா,

அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்!

அம்மா அப்பா!
என்ன தவம் செய்தோம்
உங்களை பெற்றோராக பெற
அன்பு அரவணைப்பு ஆதரவு
என்ன குறை வைத்தீர்கள் எங்களுக்கு!

அரை நூற்றாண்டு கல்யாண பந்தம்
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
எங்கள் எல்லோருக்கும்
உங்கள் அரவணைப்பு தேவை!

இன்னும் பல ஆண்டுகள்
உடல் உள நலத்தோடு இருக்க
வாழ்த்துகின்றோம்!

அன்னையே தந்தையே!
இவ்வுலகத்தில் சொல் உள்ளதோ
நாங்கள் நன்றி சொல்ல..
யாருக்கு புரியுமோ தெரியுமோ – நீங்கள்
எமக்காக செய்த தியாகங்கள்!

உங்கள் முயற்சியில் நாங்கள் பெற்ற
படிப்பு பதவி உயர்வு எல்லாமே – எமக்கு
நீங்கள் தந்த கொடை !

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அதற்கு ஈடாக – கைமாறு
செய்ய இயலுமோ!

இது போல இன்னும் பல ஆண்டுகள்
எம்முடன் வாழ வழி விட
இறைவனை வேண்டி நிற்கின்றோம்

உங்கள் அன்பு செல்வங்கள்
பிரதீபன் ,பிரபா, பார்த்தீபன், தீபா