Day: January 11, 2020
அருங்காட்சியகத்திலிருந்து அகற்றப்பட்டது ஹரி மேகன் தம்பதியின் சிலைகள்!
லண்டன் அருங்காட்சியகத்தின் பிரித்தானிய அரச குடும்ப பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹரி மேகன் தம்பதியின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. லண்டனில், அமைந்துள்ள Madame Tussauds என்ற அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தினரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மகாராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப், இரவரசர்மேலும் படிக்க...
நிர்பயா குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை!
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என இந்தியாவில் பலாத்காரத்திற்கு எதிரான மக்கள் என்ற தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்திற்கு குறித்த தொண்டு நிறுவனம் கடிதமொன்றையும்மேலும் படிக்க...
இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!
பாகிஸ்தான் இராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அவர்கள் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. பாக்கிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரியமேலும் படிக்க...
ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைவு – துளசி
இனப் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைந்துள்ளதாக ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி,மேலும் படிக்க...
சிங்கள மக்கள் விரும்பும் தீர்வையே தமிழ் மக்களுக்கு வழங்க முடியும்! – மகிந்த

சிங்கள மக்கள் விரும்பும் தீர்வையே தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுக்கு தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கமேலும் படிக்க...
பிரான்ஸில் மீண்டும் வலுப்பெறும் போராட்டம்
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள், மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்திற்கு இதுவரை தீர்வொன்று கிடைக்காத நிலையில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடிமேலும் படிக்க...
மலையகத்தில் இரு பல்கலைக் கழகங்களை அமைக்க நடவடிக்கை
நுவரெலியாவில் இரு பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மலையகத்தின் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா- சந்ததேன்ன என்ற இடத்தில் அமைந்துள்ள இலங்கை வனவியல் நிறுவனம், உள்ளூர்மேலும் படிக்க...
அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவில் பேசவில்லை – வெளி விவகார அமைச்சர்
தேசிய பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு விவகாரம் குறித்து இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டமேலும் படிக்க...
முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்
இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரைச் சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். அதற்கமைய இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை அதிகமாக உட்கொண்டு வருகிறார். இதற்காகமேலும் படிக்க...
நிர்மலாதேவி வழக்கு… ஆட்சி மாறினால் உண்மை வெளிவரும்… வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர் பேட்டி
நாட்டின் நலன் கருதி சில உண்மையை இந்த வழக்கில் சொல்ல விரும்புகிறேன். இந்த வழக்கில் நேரடியாக விஐபிக்கள் சம்பந்தப்பட்டிருப்பது உண்மை. ஆனால் அதை மறைத்து நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டுமே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தன்மேலும் படிக்க...
நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், இன்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச்மேலும் படிக்க...
தவறுதலாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது – ஈரான்
மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்சி அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது. விமானம் இராணுவ முகாமிற்கு மிகவும் அண்மித்து பறந்துள்ளதால் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த தினம்மேலும் படிக்க...
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் நாட்டில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம்மேலும் படிக்க...