Main Menu

அருங்காட்சியகத்திலிருந்து அகற்றப்பட்டது ஹரி மேகன் தம்பதியின் சிலைகள்!

லண்டன் அருங்காட்சியகத்தின் பிரித்தானிய அரச குடும்ப பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹரி மேகன் தம்பதியின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

லண்டனில், அமைந்துள்ள Madame Tussauds என்ற அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தினரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதில் மகாராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப், இரவரசர் சார்லஸ் அவரது மனைவி, இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் ஆகியோர் சிலைகளுடன் இளவரசர் ஹரி மேகன் சிலையும் இடம் பிடித்திருந்தது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஹரி மேகன் தம்பதியின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த உத்தியோகப்பூர்வ செய்தியினை Madame Tussauds என்ற அருங்காட்சியகம் தங்களது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதனால் அரச குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் அரச குடும்பத்தின் எந்தவொரு மூத்த உறுப்பினரையும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள அவர்கள் இருவரும் மகாராணியின் மாட்சிமையை ஏற்றுக்கொள்வதாகவும் ஆதரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன் நிதி ரீதியாக சுயாதீனமாகப் பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் அருங்காட்சியகத்திலிருந்து ஹரி மேகன் தம்பதியின் சிலைகள் அகற்றப்படுவதற்கு முன்னர்.

பகிரவும்...