Main Menu

தவறுதலாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது – ஈரான்

மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்சி அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

விமானம் இராணுவ முகாமிற்கு மிகவும் அண்மித்து பறந்துள்ளதால் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த தினம் 176 பயணிகளுடன் சென்ற உக்ரேனிய விமானமொன்று ஈரானில் வைத்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதன்போது, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.