Main Menu

பிரான்ஸில் மீண்டும் வலுப்பெறும் போராட்டம்

பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள், மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்திற்கு இதுவரை தீர்வொன்று கிடைக்காத நிலையில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய இரண்டு எதிர்ப்பு பேரணிகள் நடத்த தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்தை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைத் தக்க வைத்துக் கொள்ள நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் தங்களது தொழிலாளர்களு;ககு அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கிடையில், நேற்று பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள பிளேஸ் செயிண்ட்- அகஸ்டின் அருகே பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்க முற்பட்ட பொலிஸார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பொலிஸார், கண்ணீர் புகை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.

56,000 பேர் கலந்துக் கொண்ட இந்த போராட்டத்தில், 16 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். 20 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

இன்று நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அங்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொலிஸார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக அரசிற்கெதிரான போரட்டத்திற்காக திரளும் மக்களினை கட்டுப்படுத்த பொலிஸார், திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...