Main Menu

ஒமான் நாட்டின் அரசர் காலமானர்

ஒமான் நாட்டின் அரசர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79 ஆவது வயதில் காலமானர்.

புற்றுநோய்க்கு ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (10) அவர் காலமாகியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்டகாலமாக ஆட்சி செய்த சுல்தான். அவரது ஆட்சி காலத்தில் ஓமான் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுத்தார். மேலும் அந்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்டினார்.

எண்ணெய் வளத்தை வைத்து தனது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினார்.

இவர் தனது 29 ஆவது வயதில் ஆட்சிக்கு வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு அடுத்த அரசர் யார் என்பதையும் இவர் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றைய தினம் காலமானார். இவரது இறப்பை ஓமான் நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. இவரது பிறந்த நாளான நவம்பர் 18-ஆம் திகதி ஓமான் நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...