Main Menu

ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா அல்-சின்வார் மீண்டும் தேர்வு!

ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா சின்வார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

காசா முனை பகுதியில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமது அரசியல் பிரிவின் தலைவராக யாஹ்யா அல்-சின்வாரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஹமாஸ் போராளிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாலஸ்தீனிய போராளிகளுக்கு எதிராக சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான கைதி இடமாற்றத்தில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த ஹமாஸ் போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது

பகிரவும்...