Main Menu

ஸ்பெய்னில் கடும் குளிர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஸ்பெய்னில் நிலவும் கடும் குளிருடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்னின் ஹலிசியா மற்றும் அஸ்துரியாஸ் நகரங்களில், கடந்த இரண்டு நாட்களாகப் பனிமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மணிக்கு 75 மைலுக்கும் அதிகமான வேகத்தில் புயல் வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து கார்கள் சேதமடைந்துள்ளன.

அதேபோன்று வீதிகளில் பனிப்படலம் சூழ்ந்துள்ளமை காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

பகிரவும்...