Main Menu

நேட்டோ மாநாடு தொடர்பான உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்த மாநாடு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேட்டோ உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு லண்டனில் இந்த மாநாடு அடுத்த மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

நேட்டோ படையினர் தொடர்பாக ட்ரம்ப், பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில், இந்த மாநாட்டில் அவர் பல விடயங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துப்படுத்தும் நாடுகள் நேட்டோ அமைப்பிற்கு, தமது தேசிய உற்பத்தியில் 4 சதவீத நிதிப்பங்களிப்பை வழங்குகின்றன.

இந்த தொகையானது குறைவு எனவும், இதனால் நேட்டோ அமைப்பைக் கொண்டு நடத்த அமெரிக்காவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்ததையடுத்து, இராணுவ செலவுக்கு மேலதிகமாக 33 பில்லியன் டொலர்கள் செலவழிக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட 29 நாடுகள் கொண்ட வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என கூறப்படும் நேட்டோ அமைப்பு, கடந்த 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவு உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடந்தால், அது அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும், மற்ற உறுப்பினர்கள் உதவ வேண்டும் தாக்கப்பட்டால், தேவைப்பட்டால் ஆயுதப்படைகளுடன் களமிறங்க வேண்டும். இதுவே இவ் ஒப்பந்தமாகும்.

பகிரவும்...