Main Menu

மஞ்சள் மேலங்கி போராட்டம்! – பரிசில் பலத்த வன்முறை

மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாள் பலத்த வன்முறையின் கீழ் இடம்பெற்றது.  பரிசுக்குள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறிப்பாக பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Champerret பகுதியில் பலத்த  வன்முறை வெடித்தது. Place d’Italie பகுதி தற்போது போர்க்களமாக மாறியுள்ளது. காவல்துறையினருக்கும் மஞ்சள் மேலங்கி போராளிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. போராளிகள் கடைகளின் கண்ணாடிகளை உடைத்தும், வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை உடைத்தும் தீமூட்டியும் வன்முறையில் ஈடுபட்டனர்.  1,204 இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். 34 பேர் நண்பகல் 12 மணி வரை கைதானதாகவும் அறிய முடிகிறது. 18 ஆம் வட்டாரத்திலும் வன்முறை பெரிதளவில் வெடித்தது. காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

பகிரவும்...