Main Menu

வெனிசுலாவில் 17 கைதிகள் சுட்டுக்கொலை

வெனிசுலாவின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த 17 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவின் ராணுவத்தினரால் வெளியிடப்பட்டு சர்வதேச ஊடகம் ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்று வெள்ளிக்கிழமை குறித்த கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும், இதன்போது சிறைக்கடமையிலில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த கைதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெனிசுலாவின் தேசிய காவல் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொல்லப்பட்ட கைதிகள் ஆயுதம் தாங்கியிருந்ததாகவும், சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் கதவினை தகர்க்க முற்பட்ட வேளையிலேயே அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிறை அதிகாரி ஒருவரால் ஒலிபெருக்கி வாயிலாக சிறைக்கைதிகளுடன் பேசிய நிலையில், அவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு உறுதியளித்த பின்னர் குறித்த நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சிறைச்சாலைக்குள், அறிவிக்கப்பட்டுள்ள தொகையினை விட அதிகமான கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், குறித்த எண்ணிக்கை 40 ஐ நெருங்கும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வெனிசுலாவில் உள்ளூர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, அந்நாட்டு சிறைச்சாலைகள் அமைச்சர் சிறை அதிகாரிக்கும் கைதிகளுக்கும் இடையிலான முறுகல் காரணமாக இந்நிலை தோன்றியதாக தெரிவித்துள்ள அதேவேளை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக தகவல்களை தெரிவிக்க மருத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...