Main Menu

மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சிறப்பு அதிகாரி

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி வழங்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் தேவையில்லாமல் வெளியில் சுற்றிதிரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதியோர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

நோய் அறிகுறி இல்லை என்றாலும் விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும், சிறு வணிகர்கள் டெலிவரி பணிகளில் ஈடுப்பட்டுள்ளோர் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.

தன்னார்வலர்கள் மூலம் கொரோனா பரவுவதால் அவர்களையும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சுயக்கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்தவர்கள் பேசும்போது முகக்கவசத்தை எடுத்துவிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிரவும்...