Main Menu

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று எப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்தது?

ஜேர்மனியில் அதிகாரப் பரவலாக்க கட்டமைப்பின் மூலமே, தற்போதைய நோய்த் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தியதாக ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

16 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் ஜேர்மனி, கூட்டாச்சி முறையில் செயற்பட்டு வருகிறது. அந்தந்தப் பிராந்திய ஆளுநர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் குறித்த மாகாணங்களில் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய வாரங்களில் தினமும் சராசரியாக 2000 பேர் அளவில் தொற்று உறுதியாகி வந்தநிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1,500ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், தொடந்து சுகாதார ரீதியான வழிமுறைகள் மிகத் தீவிரமாக பின்பற்றப்படும் என்று ஜேர்மனி அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் அமுலில் உள்ள முடக்க நிலையில், கடந்த வாரம் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், வைரஸ் தொற்றினை தடுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் நடைமுறையிலேயே உள்ளன.

குறிப்பாக, தற்போது பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணியாத குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில ஆறாவது இடத்தில் உள்ள ஜேர்மனியில், மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...