Main Menu

விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேசத் தயார்- பிரதமர் மோடி

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது.

இதற்காக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுக்கு நிதியை வழங்கிவைத்தார்.

இதன்போது உரையாற்றிய அவர், வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகள் விரும்பும் இடத்தில் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்க வழிவகை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வியெழுப்பியுள்ள பிரதமர், விவசாயிகளுக்கு தொண்டாற்ற அரசு கடமைப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை மீளப் பெறுமாறு வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...