Main Menu

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்- கிறிஸ்மஸ் உரையில் பாப்பரசர் வேண்டுகோள்!

கொவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்மஸ் தினமான இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிரியா, யேமன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் போரினால் அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் அவலங்கள் குறித்து புனித பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்தக் குழந்தைகளைக் காக்க அனைவரும் கவன்ததைச் செலுத்துவோம் என அவரது கிறிஸ்மஸ் தின உரையில் பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், குறித்த நாடுகளில் சமாதானத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டு்ம என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, மூடிய தேசியவாதங்களைக் கொண்டு உண்மையான மனித குடும்பமாக வாழ்வதைத் தடுக்க அனுமதிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

மேலும், உலக சுற்றுச்சூழல் நெருக்கடி, கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தற்போது கொரோனா தொற்றுநோயை அடுத்து மோசமடைந்துள்ளது.

இந்நிலையில், ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவது அனைவருக்கும் மிகமுக்கியமானது என பாப்பரசர் பிரான்சிஸ் தனது கிறிஸ்மஸ் தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...