Main Menu

விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு

விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு புதிதாக விண்வெளி படைப்பிரிவை உருவாக்க வகை செய்யும் மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டார்.

இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு குயன் ((Wu Qian)) பொது சொத்தான விண்வெளியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துவதையே சீனா ஆதரிப்பதாகவும், அங்கு ஆயுதப் போட்டி ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கையால், விண்வெளியில் நிலவும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், ஆதலால் அதை சீனா எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  

பகிரவும்...