Main Menu

2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா?

நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான்.

மிக எளிதாக நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம்.

நமக்கு எளிதாக நினைவில் நிற்கும் நம் பாஸ்வோர்ட்கள், ஹேக்கர்ஸ் எனப்படும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் திருட்டு வேலைகளில் ஈடுபட அதைவிட மிக எளிதாக அனுமதிக்கிறோம் என்பதே உண்மை. சர்வதேச அளவில் 2019ம் ஆண்டில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை, worst passwords of 2019 என்ற பெயரில் Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வோர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. டாப் 10ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.

பட்டியல் விவரம் பின்வருமாறு:

மோசமான பாஸ்வோர்ட்கள் பட்டியலில் வழக்கம் போல இந்த ஆண்டும் 123456, 123456789, qwerty, மற்றும் password ஆகிய பாஸ்வோர்ட்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் நான்காம் இடத்தில் உள்ள password, கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1. 123456

2. 123456789

3. qwerty

4. password

5. 1234567

6. 12345678

7. 12345

8. iloveyou

9. 111111

10. 123123

இன்னும் புத்தாண்டிற்கு 4 நாட்களே உள்ள நிலையில் நீங்கள் ஒரு புத்தாண்டு தீர்மானத்தை எடுக்க நினைக்கிறீர்கள் என்றால்  உங்கள் பாஸ்வோர்ட்களை மேம்படுத்த சபதம் செய்யுங்கள். மின்னஞ்சல், வங்கி மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற உங்கள் முக்கியமான கணக்குகளுக்கு குறைந்தபட்சம் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வோர்ட்களை உருவாக்கி கொள்ளுங்கள்.

பகிரவும்...