Main Menu

வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 988 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் மக்களவையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 988 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே அதிகளவானர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் வளைகுடா நாடுகளில் நான்காயிரத்து 823 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

சராசரியாக தினமும் 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் இணை அமைச்சர் வி.முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...