Main Menu

இந்தோனேசியாவில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அரச பணிகளில் நியமிக்க தடை

இந்தோனேசியாவில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அரச பணிகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் அரச பணிகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஏராளமான துறைகளில் நியமனம் வழங்கப்படக் கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அவர்களுக்கு பதிலாக தகுதியான விண்ணப்பதார்களே குறித்த பணிகளில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

26 கோடி மக்கள் வசிக்கும் இந்தோனேசியா, உலகிலேயே அதிக அளவு முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும்.

அங்கு பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...