Main Menu

வன்முறைக்கு எதிராக கூடிய ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள்

ஹாங்காங்கில் வன்முறைக்கு எதிராகவும், போலீசாருக்கு ஆதரவாகவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமர் பூங்கா அருகே நடந்த இந்த போராட்டத்தில் சீனா மற்றும் ஹாங்காங் பிராந்தியக் கொடிகளை கையில் ஏந்தியவாறு வன்முறை வேண்டாம் என்று கோஷமிட்டனர்.

மற்றொருபுறம் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொது சொத்துகளை சேதப்படுத்தியும் குப்பைகளுக்கு தீவைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்தனர்.

ஹாங்காங் அரசியலில் சீனாவின் தலையீட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல மாதங்களாக அங்கு போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...