Main Menu

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட முடிவுகளில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஆப்கன் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முதற்கட்ட தேர்தல் முடிவுகளை  வெளியிட்டுள்ளனர்.

அதில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி 50 புள்ளி 64 சதவீதம் வாக்குகளை பெற்று முன்னிலை வகிப்பதாகவும், அவரை எதிர்த்து களம் கண்ட அப்துல்லா 39 புள்ளி 52 சதவீதம் வாக்குகளை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆப்கானிஸ்தானில் 2வது முறையாக அஷ்ரப் கனி மீண்டும் அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், புகார்கள் இருந்தால் அதனை பதிவு செய்ய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...